தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி

தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி

தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் - உலக வங்கி
Published on

உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா திகழ்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பு 2021ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டாலராக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமமாகும். அமெரிக்காவிலும் சவுதி அரேபியா, குவைத் போன்ற அரபு நாடுகளிலும் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய வகையில் இத்தொகை வந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவை தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவு பணம் அனுப்பபட்டுள்ளதாகவும் உலக வங்கி கூறியுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com