தமிழ்நாடு
புயலாக மாறுமா அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை மையம் பதில்!
புயலாக மாறுமா அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை மையம் பதில்!
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது. இது தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தமானின் போர்ட் பிளேர்-ல் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே, மியான்மரில் இன்று பிற்பகல் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.