\
சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ-ல் காற்றழுத்த மண்டலம் - இந்திய வானிலை மையம்

சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ-ல் காற்றழுத்த மண்டலம் - இந்திய வானிலை மையம்

சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ-ல் காற்றழுத்த மண்டலம் - இந்திய வானிலை மையம்
Published on: 

வங்கக்கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 130கி.மீ தொலையிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 150 கி.மீ தொலைவிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இதனால் நேற்று இரவிலிருந்தே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை இன்னும் சிலமணி நேரங்கள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்துசெல்ல உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com