\
“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு

“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு

“மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங்” - ஜவாஹிருல்லா பேச்சால் சலசலப்பு
Published on: 

இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமர் மன்மோகன்சிங் தான் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி‌‌ தலைவர் திருமாவளவனை ஆதரித்து லால்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு உரையாற்றினார்‌. அப்போது பேசிய அவர், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவருடைய புதல்வர் ராஜீவ் காந்தி என்பதற்கு பதிலாக ராகுல் காந்தி எனக் குறிப்பிட்டு பேசினார். 

இதைத் தொடர்ந்து பேசிய அவர், நரேந்திர மோடி ஆட்சியை என்று சொல்வதற்கு பதிலாக மன்மோகன்சிங் ஆட்சியை என்று தவறாக குறிப்பிட்டார். இந்தியாவை ஆட்சி‌ செய்த பிரதமர்களில் மோசமான பிரதமர் மன்மோகன் சிங் தான் என்றும் ஜவாஹிருல்லா பேசியதால் கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com