ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் இந்தியா

ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் இந்தியா

ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் இந்தியா
Published on

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் 3 ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். இதற்கான தேர்தல் ஐ.நா பொதுசபையில் நேற்று நடைபெற்றது. 193 உறுப்பு நாடுகளில், தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க 184 நாடுகள் ஆதரவு அளித்து வாக்களித்தன. 97 வாக்குகள் பெற்றாலே, தலைமை தாங்க முடியும் என்ற நிலையில் அதிக அளவு பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் பதிவிட்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்குவதற்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் தற்போதைய பொறுப்பு இந்த ஆண்டு முடிவடையவிருக்கும் நிலையில், மீண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் தொடரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com