மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக உத்தரவு.. நீதிபதி சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர திட்டம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற, கடந்த 1ஆம் தேதி தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்உத்தரவிட்டார். ஆனால், 144 தடைஉத்தரவு மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக உத்தரவு செயலாக்கப்படவில்லை. இதனால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார்.
ஏற்கனவே தமிழகஅரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிபதிஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
இந்தசூழலில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக நீதிபதி உத்தரவிட்டதாகக் கூறி, ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சிகள் கையெழுத்துகளை திரட்டி வருகின்றன. அவற்றை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கஇருப்பதாகவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தகவல் தெரிவித்தார்.

