IND vs AUS: குவியும் ரசிகர்கள்: திணறும் சேப்பாக்கம்! டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு. போட்டியை காண காலை முதல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா இன்று எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி டெங்கு காய்ச்சல் காரணமாக சுப்மன் கில் விளையாட முடியாத நிலையில், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் ஓபனிங் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இன்றையப் போட்டியை காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்ததை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com