வடகிழக்கு பருவமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் குடிநீர் ஆதாரங்களாக உள்ள முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 1,493 கன அடியா‌க உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 487 மில்லியன் கன அடியிலிருந்து 614 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது ‌332 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு அதிகரித்துள்ளது. கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 148 கன அடியிலிருந்து 240 கன அடியாக‌ உயர்ந்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஏரிக்கு நீர்வரத்து 1,719 கன அடியிலிருந்து 1,970 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியில் தற்போது நீரிருப்பு 452 மில்லியன் கன அடியிலிருந்து 617 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. சோழவரம் ஏரிக்கு தற்போது 336 கன அடியிலிருந்து 695 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஏரியில் நீர் இருப்பு 180 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com