தமிழ்நாடு
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியை நோக்கி உயர்ந்து வருகிறது. நீர்வரத்து விநாடிக்கு 1,266 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 225 கன அடி தண்ணீர் குமுளி மலையின் இரைச்சல்பாலம் வழியே திறந்து விடப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் 28 மில்லி மீட்டர் மழையும் தேக்கடியில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.