காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு அலகுகளை கொண்ட 840 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் மின் தேவை 11 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்ததாலும் காற்றாலை மின் உற்பத்தி மூலமாக 8 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கிடைப்பதாலும், சோலார் மூலமாக 3,000 மெகாவாட் மின் உற்பத்தி கிடைப்பதாலும் மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 365 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதேபோன்று 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள நான்கு அலகுகளில் 1வது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்து மீண்டும் தமிழகத்தில் மின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com