தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மால்கள், தியேட்டர்கள் மூட வாய்ப்பு?

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மால்கள், தியேட்டர்கள் மூட வாய்ப்பு?

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மால்கள், தியேட்டர்கள் மூட வாய்ப்பு?
Published on

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட  வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகியிருக்கிறது

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை தமிழக அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது ஞாயிறு முழுஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகவும், இரவு ஊரடங்கின் நேரத்தை அதிகரிக்கவும், அலுவலகத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் கூட்டத்தை குறைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், மால்கள், பெரிய கடைகள், தியேட்டர்கள்  மூட உத்தரவிடப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் தமிழகத்தில் முழு ஊரடங்கை வெள்ளி மாலை முதல் திங்கள் காலை வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com