\
ஆறு நாட்களுக்கு பிறகு சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு!- விக்டோரியா மருத்துவமனை

ஆறு நாட்களுக்கு பிறகு சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு!- விக்டோரியா மருத்துவமனை

ஆறு நாட்களுக்கு பிறகு சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு!- விக்டோரியா மருத்துவமனை
Published on

பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதோடு, சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 272 ஆக இருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, நேற்று முறைப்படி சிறை நிர்வாகத்தால் விடுதலை செய்யப்பட்டார். உடல் நிலை சரியாகும் பட்சத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com