\
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு !

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு !

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு !
Published on

தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மாலை காற்று மாசு அதிகரித்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் காலை 100 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு, மாலையில் 159ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 4 சிகரெட்டுகளை புகைத்தால் நுரையீரல் சந்திக்கும் பாதிப்புக்கு சமம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடி, கடலூர், மதுரை, ஓசூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றின் மாசு அதிகரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த அளவு குறைந்திருப்பதாக ஆறுதல் அளிக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com