\
உடல் எடை குறைப்பு நிறுவனம் ‘கலர்ஸ்’-ல் வருமான வரித்துறை சோதனை

உடல் எடை குறைப்பு நிறுவனம் ‘கலர்ஸ்’-ல் வருமான வரித்துறை சோதனை

உடல் எடை குறைப்பு நிறுவனம் ‘கலர்ஸ்’-ல் வருமான வரித்துறை சோதனை
Published on: 

உடல் எடை குறைப்பு நிறுவனமான கலர்ஸ்-ல் (KOLORS) வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

உடல் பருமன் குறைப்பு, உடல் ஆரோக்கியம் மேம்பாடு போன்றவற்றுக்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனம் 'கலர்ஸ்'. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. இந்நிலையில், வரி ஏய்ப்பு காரணமாக 3 மாநிலங்களில் கலர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் 6 இடங்களிலும், கோவை, வேலூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட இ‌டங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்பது குறித்து சோதனை நிறைவடைந்த பின் தெரியவரும் எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com