\
எஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை 

எஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை 

எஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை 
Published on: 

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் எஸ்.என்.ஜே. நிறுவனத்துக்கு சொந்தமான 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2 வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் எஸ்.என்.ஜே. நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன. மதுபானம் மற்றும் சர்க்கரை ஆலைகள், நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட நிறுவனங்களுடன், திரைத்துறையிலும் பங்கு வகிக்கிறது ‌எஸ்.என்.ஜே நிறுவனம். 

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் எஸ்.என்.ஜே. நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நந்தனம், தியாகராயர் நகர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

ஒரே நேரத்தில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், 100க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை தொடங்கிய இந்தச் சோதனை, 2 ஆம் நாளாக இன்றும் நீடிக்கிறது. ‌இதுவரை கணக்கில் வராத 4 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com