\
ஐடி ரெய்டு: சிறையில் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

ஐடி ரெய்டு: சிறையில் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

ஐடி ரெய்டு: சிறையில் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
Published on

வருமானவரித்துறை சோதனையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் சசிகலா உறவினர்களின் இல்லம் மற்றும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு மற்றும் அலுவகங்கள், தினகரன் வீடுகள், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 187 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையில் 1,800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார். வழக்கறிஞர்கள் அசோகன் மற்றும் மூர்த்திலால் கிருஷ்ணப்பா ஆகியோர் சசிகலாவுடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினர். அதில், வருமானவரித்துறை சோதனையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com