கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு

கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு

கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு
Published on

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கிறார். அந்த வீட்டிற்கு அருகாமையில் அவரது அலுவலகம் ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு வருகை தந்தனர். அவர்கள் தற்போது அந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் வீட்டிலிருக்கும் கதவுகளை அடைத்துவிட்டும், வீட்டிலிருந்து யாரேனும் வெளியேறக்கூடாது என கட்டுப்பாடுகள் விதித்தும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிற்குள் யாரும் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா ? என்று சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் மகன், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் எம்.எல்.ஏ விடுதி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com