தமிழகம் முழுவதும் சரவண பவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு !
தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள். உணவகங்கள் மற்றும் உரிமையாளர்களின் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சோதனை நடந்துவருகிறது.
வரி ஏய்ப்புப் புகாரில் 100க்கம் அதிகமான அதிகாரிகள் ஒரேநேரத்தில் இந்த சோதனை நடந்துவருகிறது. மேலும் வடபழனி, சென்னை தியாகராய நகரரில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர், இதனைத்தொடர்ந்து உணவகங்களின் செயல் அதிகாரி, மேலாளர் போன்றவர்களின் வீடுகளிளும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.