பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பாரிமுனையில் தொடர்ந்து சோதனை

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பாரிமுனையில் தொடர்ந்து சோதனை
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பாரிமுனையில் தொடர்ந்து சோதனை

பால்தினகரனுக்கு சொந்தமான கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. 3 நாட்கள் நடந்த ஐடி ரெய்டில் சொத்துகள், நிதிவசூல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

கோவை காருண்யா பல்கலைக்கழகம் உட்பட பால் தினகரனுக்கு சொந்தமான 10 இடங்களில் கடந்த 3 நாட்கள் இரவு, பகலாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவையில் உள்ள அனைத்து இடங்களிலும் வருமான வரி சோதனை நேற்று இரவோடு முடிவடைந்துள்ளது. பிற இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஒருசேரக் கொண்டுவரப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் அங்குள்ள நிதிப்பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவோடு சோதனை முடிவுற்றது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி கொண்டுசென்றுள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சோதனைகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனைமுடிவில் கிடைக்கும் அனைத்து ஆவணங்களையும் வைத்து உண்மையில் வரிஏய்ப்பு நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் பால் தினகரன் வெளிநாட்டில் இருப்பதால் சோதனை முடிவை வைத்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com