சத்யம் சினிமாஸின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை
சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார காலம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்கு சொந்தமான வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமா தியேட்டர்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் தொடர்ச்சியாக இன்று சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த சோதனைகளின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சத்யம் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை சசிகலா தரப்பு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்தும் வருமான வரித்தறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.