திருமணத்திற்கு செல்வது போல் ரெய்டு சென்ற வருமானவரித்துறை
சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ள திருமணத்திற்கு செல்வது போன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இன்று காலை முதல் சசிகலா குடும்பத்தினர், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை தொடர்கிறது. குறிப்பாக சென்னையில் ஈக்காட்டுத்தாங்களில் உள்ள ஜெயா டிவி நிறுவனம், நமது எம்ஜிஆர் நாளிதழ் நிறுவனம், மிடாஸ் மது ஆலை, ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற வருகிறது.
வருமானவரித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநேரத்தில் 6 வருமானவரித்துறை ஆணையர்கள் தலைமையில் 1,800 அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 1000 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும், திருவாரூரில் 12க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
“ஸ்ரீனி வெட்ஸ் மஹி” என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றுள்ளனர். இதற்காக வாடகைக் கார்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் அதிகாரிகள் சென்றுள்ளனர்.