ஆவணங்களை வெளியே வீசிய அமைச்சர்கள்: வருமான வரித்துறை குற்றச்சாட்டு

ஆவணங்களை வெளியே வீசிய அமைச்சர்கள்: வருமான வரித்துறை குற்றச்சாட்டு

ஆவணங்களை வெளியே வீசிய அமைச்சர்கள்: வருமான வரித்துறை குற்றச்சாட்டு
Published on

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையின் போது நுழைந்த அமைச்சர்கள் வரம்பு மீறி ஆவணங்களை வெளியே வீசியதாக வருமானவரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட மூன்று பேரும் வருமானவரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்தவிடாமல் தடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்த அமைச்சர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை சட்டவிரோதமாக கைப்பற்றி வீட்டிற்கு வெளியே தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த காரை மறித்தபடி, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் ‌பரபரப்பு நி‌லவியது. இதையடுத்து கூடுதல் காவல்துறை பாதுகாப்பு கோரி காவல்துறை ஆனையருக்கு வருமானவரித்துறையினர் கடிதம் எழுதியிருப்பதாக தெரிகிறது. கூடுதலாக 50 காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்றும் வருமானவரித்துறை கோரியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com