”வருமான வரி குறித்து பயப்படத் தேவையில்லை; ஏனெனில்..” - விளக்கம் கொடுத்த ஆணையர்!

”வருமான வரி குறித்து பயப்படும் அளவுக்கு எதுவுமில்லை” என அத்துறை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்
வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்file image

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்குமேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் தனிநபர் வருமானவரி செலுத்த வேண்டும். அதுபோல் வரி செலுத்தும் ஒவ்வொருவரும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதும் கட்டாயமாகும். அப்படி, கட்டாதவர்களுக்கு அபராதமோ, கூடுதல் வட்டியோ விதிக்கப்படும். என்றாலும், இதைச் செலுத்துவதில் பலருக்கும் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதுதொடர்பாக விளக்க வீடியோக்கள், தகவல்கள் அரசுகளால் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வருமானவரித் துறை ஆணையர் ரவிச்சந்திரன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அவர், “வருமானவரித் துறை குறித்து பயப்படும் அளவுக்கு எதுவுமில்லை. வருமானவரித் துறை தொடர்பான புரிதல் இல்லாததே அவர்களுக்கு பயம் ஏற்படுவதற்குக் காரணம். சாதாரணமானவர்கள்கூட யாருடைய உதவியுமின்றி வருமான வரி கட்டுவதற்கு ஏற்றவகையில் ஆன்லைனில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் மிகவும் சுலபமாக பதிவு செய்ய முடியும். தவிர, அடுத்த 2-3 மணி நேரத்தில் ரீபண்டுகூட வந்துவிடுகிறது. அதனால் பதிவு செய்வதிலும் சரி, ரீபண்டு பெறுவதிலும் சரி... தற்போது எந்தப் பிரச்னைகளும் இல்லை.

அதுபோல், ஒருவர் என்னென்ன வரிகள் கட்டியுள்ளார் என்பது குறித்த விவரமும் அதில் தெரிந்துவிடும். ஆக, வருமானவரி பதிவு செய்வது என்பது பெரிய விஷயமல்ல. அது அப்பீல் தொடர்பாக மெயில் மற்றும் போன் மூலமாக விவரம் அளிக்கப்படும். இதுபோல நிறைய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. வரி வசூல் எப்படி செய்வது என்பது குறித்து வீடியோ தமிழிலும் உள்ளது. இதுகுறித்து 16 வீடியோக்களை தமிழில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளோம். இதனால் வருமான வரி தாக்கல் செய்வதில் எந்தக் கஷ்டமும் இருக்காது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரி வசூல் செய்யப்பட்ட தொகை, 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி. அதில் நம்முடைய டார்கெட் என்பது 3 ஆயிரம் கோடி. இதில் அகில இந்திய அளவில் பார்க்கும்போது 6 சதவிகிதம் ஆகும். மொத்தத்தில் 16 லட்சத்து 50 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு 6 சதவிகிதம் ஆகும். மேலும், வரி வசூலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூருவைத் தொடர்ந்து தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. அதிலும் தமிழகத்தின் குரோத் 20-23 சதவிகிதம் வரை உள்ளது. குரோத் அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்
வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன்புதிய தலைமுறை டி.வி.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 67 லட்சம் பேர் வரி கட்டியுள்ளனர். அது, இந்த ஆண்டும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டும் 10 சதவிகிதம் உயர்ந்து 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் வரி கட்டியுள்ளனர். அதேநேரத்தில், வரி கட்டவில்லை என்றால், வட்டியுடன் வசூலிக்கப்படும். அப்படியும் அவர்கள் கட்டத் தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதில் முறைகேட்டில் ஈடுபடுவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் மற்றும் பேன்கார்டு இணைப்பின் மூலம் மோசடிகளையும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com