ஈரோடு: கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

ஈரோடு: கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
ஈரோடு: கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் எஸ்.கே.எம். கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

ஈரோட்டில் மயிலானந்தன், அவரது மகன்கள் சந்திரசேகர், சிவகுமார் ஆகியோருக்குச் சொந்தமான எஸ்.கே.எம். நிறுவனம், அப்பெயரில் கால்நடை தீவனம் மற்றும் உணவு தயாரிக்கும் ஆலை, சமையல் எண்ணெய் நிறுவனம், முட்டை பவுடர் உற்பத்தி ஆலை, முட்டை ஏற்றுமதி ஆகியவற்றை நடத்தி வருகிறது. கடந்த புதன் கிழமையன்று எஸ்.கே.எம். நிறுவன அலுவலகங்கள், அவற்றின் உரிமையாளர்களின் வீடு, மருந்தகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையைத் தொடங்கினர். வரி ஏய்ப்பு குறித்த புகார்களின் பேரில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.

5 நாள்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள், ஈரோடு பெரியார் நகரில் உள்ள வீட்டில் வைத்து சரிபார்த்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com