\
பள்ளிகளுக்கு விடுமுறை.. (கோப்புப் படம்)
பள்ளிகளுக்கு விடுமுறை.. (கோப்புப் படம்)pt web

கனமழை எதிரொலி... விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாடு முழுவதும் 21 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறைpt web

இந்நிலையில் மழை காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு வார விடுமுறை ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com