அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், காரைக்காலில் 10 சென்டி மீட்டரும், சிதம்பரத்தில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.