\
மதுரவாயலில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்

மதுரவாயலில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்

மதுரவாயலில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்
Published on
சென்னை மதுரவாயல் பகுதியில், மழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் அப்பணிகள் முடிந்த பின்னரும் சரிவர மூடப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர் மழையால் அந்தச் சாலைகள் அனைத்தும் வீணாகி குண்டும் குழியுமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குறை கூறியுள்ளனர். இதனால் அந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்று மதுரவாயல் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com