\
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Published on

கடலூர், நாகை, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்க கடலில் வங்கதேசம் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், போன்ற கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை‌. 

ஐநூறுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரகதியாக கரைக்கு திரும்பினர். வங்கதேசம் கடல் பகுதியில் வானிலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தமிழகத்தை பொருத்தவரை கடல் சற்று சீற்றமாக காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com