\
முறைகேடாக நகைக்கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு

முறைகேடாக நகைக்கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு

முறைகேடாக நகைக்கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு
Published on
தமிழகத்தில் முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் பணத்தை திருப்பி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூலிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com