தமிழ்நாடு
தமிழகத்தில் ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு - 486 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு - 486 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,12,386 பேர் சிகிச்சைப்பெற்று வருகிறனர். கடந்த 24 மணிநேரத்தில் 31,255 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கோவையில் சற்றே குறைந்துள்ளது தினசரி பாதிப்பு. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,937 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 3,937 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 2,762 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

