ஜஸ்ட் மிஸ்ஸில் பெரும் விபத்திலிருந்து தப்பித்த முதல்வர் ஸ்டாலின்... ஓமலூரில் பரபரப்பு

ஜஸ்ட் மிஸ்ஸில் பெரும் விபத்திலிருந்து தப்பித்த முதல்வர் ஸ்டாலின்... ஓமலூரில் பரபரப்பு
ஜஸ்ட் மிஸ்ஸில் பெரும் விபத்திலிருந்து தப்பித்த முதல்வர் ஸ்டாலின்... ஓமலூரில் பரபரப்பு

சேலம் ஓமலூரில் முதல்வர் ஸ்டாலின் சென்ற பாதையில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம், திடீரென உடைந்து விழுந்துள்ளது. முதல்வரின் கார் சென்ற சில நிமிடத்தில் கம்பம் சாய்ந்ததால், ஜஸ்ட் மிஸ்ஸில் முதல்வர் தப்பியுள்ளார். மின் கம்ப விபத்தால், ஓமலூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஓமலூருக்கு `கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்’ கீழ் ஆய்வு செய்ய சென்றுள்ளார். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளார் முதல்வர். இதையொட்டி இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் சென்ற முதல்வர், காரில் ஓமலூர் பேருந்து நிலையம் வழியாக ஓமலூர் தாலுக்கா அலுவலகம் சென்றார். அங்கு ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு, ஓமலூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி மாணவிகளை சந்தித்தார்.

பின் ஆய்வை முடித்துகொண்டு, சேலம் புறப்பட்டு சென்றார். அவரது கார் சேலம் சாலையில் திரும்பிய சிறிது நேரத்தில், பேருந்து நிலையத்தில் இருந்த ராட்சத போக்குவரத்து சிக்னல் கம்பம் அடியோடு சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கம்பத்தில் கேபிள் டிவி வயர்கள் கட்டப்பட்டு இருந்ததால், கம்பம் மெதுவாக சாய்ந்து பேருந்து நிலையத்தில், முதல்வர் கடந்து சென்ற சாலையில் விழுந்தது. கம்பம் சாய்வதை அறிந்த மக்கள் அங்கிருந்து ஓடியதாலும், பேருந்தை உடனடியாக நகர்த்தியதாலும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

சிக்னல் விழுந்த தகவல் அறிந்து, ஓமலூர் போலீசார் உடனடியாக பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து உடைந்து விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை அப்புறப்படுத்தினர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேருந்து நிலையம் சென்ற பேருந்துகளை, மாற்று பாதையில் போலீசர் அனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் ஓமலூரில் ஆய்வு நடத்தி சென்ற சாலையில், அவர் ஆய்வு மேற்கொண்டு சென்ற சில நிமிட நேரத்தில் கம்பம் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தியிருப்பது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிகாரிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ராட்சத சிக்னல் உடைந்து விழுந்த இடத்தில், ஓமலூர் பேருந்து நிலையத்தில் வாகன போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் நான்கு புறங்களிலும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிக்னலும் சுமார் 30 அடி உயரமும், சுமார் ஒரு அடி விட்டமும் கொண்ட ராட்சத கம்பங்கள். கடந்த இரண்டு மாதங்களுக்குதான் இவையாவும் முன்பு புதிதாக வைக்கப்பட்டது. அப்படியானவற்றில் ஒன்று விழுந்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மட்டுமன்றி, கட்டப்பட்டு இரண்டு மாதங்களேயான நிலையில் கம்பம் சரிந்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com