'தமிழகத்தில் இன்னமும் தொடரும் தீண்டாமை' - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

'தமிழகத்தில் இன்னமும் தொடரும் தீண்டாமை' - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

'தமிழகத்தில் இன்னமும் தொடரும் தீண்டாமை' - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
Published on

''இன்னும் பல இடங்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் நிலவுகிறது'' என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

75ஆம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் 90ஆம் ஆண்டு ஹரிஜன் சேவக் சங்க ஆண்டு விழா சேத்துப்பட்டு எஸ்.ஆர்.எஸ். சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ''மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஹரிஜன சங்கத்தின் விழாவில் நாம் பங்கேற்றுள்ளோம். பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மதம், மொழி, நிறம், இடங்கள் அடிப்படையில் பிரித்தார்கள். மகாத்மா காந்தி ஒருவர் தான்  இந்தியர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக்கினார். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே காந்தி கூடுதல் கவனம் செலுத்தினார். ஆனால், காந்தியின் மரணத்திற்கு பிறகு மீண்டும் வசதி படைத்தவர்களுக்கும் கல்வி படைத்தவர்களுக்கும் அனைத்தும் என டார்வினிசம் போன்ற நிலையை நாடு மீண்டும் எட்டியது. கல்வி,  தொழில், உட்கட்டமைப்பு,  சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் முன்னணியில் திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.

இந்தியாவில் கல்வித்துறையில் 6-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 28% பள்ளி செல்கின்றனர். மற்றவர்கள் பள்ளி செல்லவில்லை. ஆனால் தமிழகத்திலோ 51% குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இது சிறப்பாக விளங்குவதை காட்டுகிறது. இதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும். எனினும் இதை இன்னும் உற்றுநோக்கினால் ஹரிஜன குழந்தைளில் வெறும் 13-14 % குழந்தைகளே பள்ளி செல்கின்றனர். இந்த மாநில மக்கள் தொகையில்  24% ஹரிஜன மக்கள் வசிக்கின்றனர். அப்படியானால் சில சமூகத்தினர் மட்டுமே 70-75% கல்வி வளர்ச்சி பெறுகின்றனர். இந்த சதவீதங்களுக்கு இடையிலான இடைவெளியை நாம் பார்க்க வேண்டும்.

யாருக்கு கல்வியும் , அக்கறையும்  கொடுக்க வேண்டுமோ அவர்களை நாம் மறந்துவிட்டோம். இன்னும் பல இடங்களில்,  பல பள்ளிகளில், கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த கொடுமை ஏன்?  தீண்டாமை கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இங்கு உள்ளனர். தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இவை இன்னும் நடக்கின்றன. ஹரிஜன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், ஹரிஜன பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரில் 86% தண்டனைகளில் இருந்து தப்பிவிடுகின்றனர். தண்டிக்கப்படுவதில்லை என்பதே இக்குற்றங்கள் தொடர காரணம். ஹரிஜன மக்கள் நம் மக்கள். அவர்களின் நிலை மேம்பட உறுதுணையாக நிற்க வேண்டியது நம் கடமை" என்றார்.

இதையும் படிக்கலாமே: 'உயிரும் உடலும் போல தமிழகத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது' – ஆளுநர் தமிழிசை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com