முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்pt web

”வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே இருக்கிறது” - காரைக்குடியில் மு.க. ஸ்டாலின் பேச்சு!

இரண்டு நாட்கள் கள ஆய்வு செய்ய சிவகங்கைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் சிலை, வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
Published on

வள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட ஒரு கூட்டமே உள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சு.

மாநில அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று அடைகிறதா என்பதை அறிய ஒவ்வொரு மாவட்டமாக முதலமைச்சர் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில், இரண்டு நாட்கள் கள ஆய்வு செய்ய சிவகங்கைக்கு வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக ப. சிதம்பரம் குடும்பத்தாரால் 12 கோடி ரூபாய் செலவில் கட்டி  கொடுக்கப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தந்தார்.

பின்னர் அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசியவர்,” வள்ளல் அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்ததில் பெருமை அடைகிறேன், கல்விக்காக வள்ளல் அழகப்பர் பெரும் தொண்டாற்றியுள்ளார் வள்ளுவர். வள்ளலாரை களவாட ஒரு கூட்டமே உள்ளது” என்று, கூறியுள்ளார்.

மேலும், “பசிதம்பரம் ஒரு நடமாடும் நூலகம்” என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும், தனக்கு பரிசாக கிடைத்த 2 இலட்சத்து 75 ஆயிரம் புத்தகங்களை பல நூலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றவர், ப.சிதம்பரம் நூலகத்திற்கு முதல் கட்டமாக 1000 புத்தகங்களை அனுப்பி வைக்க உள்ளதாகவும், அரசு சார்பிலும் புத்தகங்களை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்web

பல்வேறு கல்வி திட்டங்களினால் உயர் கல்வியில் தமிழ்நாடு  முதன்மை மாநிலமாக இருந்து வருவதாக தெரிவித்த மு.க. ஸ்டாலின் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை இருக்க வேண்டும். இதற்காக இறுதி வரை சட்டப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முழு விவரத்தை காண இந்த காணொளியை பார்க்கவும்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com