”அக்காவின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை”- GOAT பாடல் பற்றி யுவன் உருக்கம்!

நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி அவரின் GOAT படத்தின் புதிய பாடல் வெளியாக உள்ளது.
யுவன் சங்கர் ராஜா - பவதாரிணி
யுவன் சங்கர் ராஜா - பவதாரிணிPT

நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி அவரின் GOAT படத்தின் சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியாகி உள்ளது. இதில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை AI தொழில்நுட்படத்தின் மூலம் உருவாக்கி, ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது GOAT படக்குழு.

தன்னுடைய சகோதரி பவதாரிணியின் குரலை பயன்படுத்தியது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார்.

அதில், “GOAT படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இப்பாடலை கம்போஸ் செய்யும் போது நானும் வெங்கட்பிரபும், இது என் தங்கைக்கான பாடல் என உணர்ந்தோம்.

அவள் மருத்துவமனையில் இருந்து வந்ததும் பாட வைத்து பதிவு செய்யலாம் என நினைத்தோம். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவளின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை. இப்பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பியுள்ளார்.

NGMPC057

இந்தப் பாடல் மற்றும் ஏஐ தொழில்பட்பத்தை பயன்படுத்தி கூடுதலாக கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இடம்பெறுவது குறித்தும் வந்துள்ள தகவலை கீழே உள்ள தொகுப்பில் காணலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com