\
சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தொட்டது

சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தொட்டது

சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தொட்டது
Published on
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசு அதிகரித்து 100 ரூபாய் ஒரு காசுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை 29 காசு உயர்ந்து 95 ரூபாய் 31 காசாக உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை சில மாதங்களுக்கு முன் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்த நிலையில் மாநில அரசு வரிகள் வகையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் அதன் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. தற்போது மீண்டும் 100 ரூபாயை பெட்ரோல் விலை கடந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com