வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி!
Published on

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டு உபடோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.சென்னையில் 1070.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1120.50க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com