சென்னையில் விடிய விடிய மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது!

சென்னையில் விடிய விடிய மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது!

சென்னையில் விடிய விடிய மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது!
Published on

வெப்பச்சலனம் காரணமாக, சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டன. 

சென்னையில் பல இடங்களில் நேற்று மாலை திடீரென்று பலத்த மழை பெய்தது. சுமார் 45 நீடித்த இந்த மழை, சென்னை புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கியது. இதைத் தொடர்ந்து இரவு மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக சென்னைக்கு நேற்று இரவு வந்த விமானம் ஒன்று பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
மேலும் கொச்சி, டெல்லி, பெங்களூரூ, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. அரை மணி நேரத்துக்கு பின் ஒவ்வொன்றாக தரையிரங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டன. பலத்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com