மின்சார வாரியம்
மின்சார வாரியம் முகநூல்

பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காமல் விபத்து ஏற்பட்டால், பணியாளர்களே பொறுப்பு - மின்சார வாரியம்

பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காததன் காரணமாக விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காததன் காரணமாக விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சார வாரியம்
மின்சார வாரியம் முகநூல்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“ பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாதது உள்ளிட்டவைகளால் விபத்துகள் நிகழ்கிறது.

எனவே, அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பணியாளர்கள் பணிகளை மேற்கொள்வதற்குமுன் தளத்தில் உள்ள மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு தொடர்பானவற்றை சரிபார்க்க வேண்டும்.

அவர்கள் பணியின்போது பயன்படுத்தும் எர்த்ராடை (EARTHROD) பயன்படுத்தும் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். மேலும் பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததன் காரணமாக விபத்து ஏற்பட்டால்  பணியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com