\
இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய ஒப்புக் கொள்ளக் கூடாது - ஸ்டாலின்

இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய ஒப்புக் கொள்ளக் கூடாது - ஸ்டாலின்

இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய ஒப்புக் கொள்ளக் கூடாது - ஸ்டாலின்
Published on

விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய ஒப்புக்கொள்ளக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா கடன்' வாங்குவதற்காக, 21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத் திட்டத்தையோ அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சாரத் திட்டத்தையோ ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை அ.தி.மு.க. அரசு, எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புக் கொள்ளக் கூடாது.

மத்திய பா.ஜ.க. ஆட்சியைப் பகைத்துக் கொண்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் பலி கேட்பார்களோ என்று பயந்து, சுயநலம் கருதி சும்மா இருந்து விடாமல் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்ற தமிழக விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட அ.தி.மு.க. அரசு நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com