இடத்தகராறில் திமுக பிரமுகரின் வெறிச்செயல் - தீ வைப்பு, விரட்டி விரட்டி அடித்து அட்டகாசம்!

இடத்தகராறில் திமுக பிரமுகரின் வெறிச்செயல் - தீ வைப்பு, விரட்டி விரட்டி அடித்து அட்டகாசம்!
இடத்தகராறில் திமுக பிரமுகரின் வெறிச்செயல் - தீ வைப்பு, விரட்டி விரட்டி அடித்து அட்டகாசம்!

சீர்காழி அருகே இடத்தகராறு ஒன்றில் வேலிக்கு தீ வைத்து, இடத்தில் குடியிருந்து அனுபவித்து வருபவரை ஓட ஓட விரட்டி வெறித்தனமாய் அடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க வைச் சேர்ந்த அன்புமணி இருந்து வருகிறார். இவரது கணவரும் முன்னாள் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து இவரது வீட்டின் அருகே உள்ள பிரகலாதன் என்பவரின் அனுபவத்தில் இருக்கும் இடத்தை கேட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மணிமாறன் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து பிரகலாதன் அனுபவித்து வரும் இடத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த வேலியை தீ வைத்துக் கொளுத்தினார்.

அப்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரகலாதனையும் அவர் தந்தை மணியையும், மணிமாறன் தரப்பினர் கட்டையால் ஓட ஓட விரட்டி அடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகலாதன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிமாறன், பிரகலாதன் குடும்பத்தினரை அடித்து விரட்டும் காட்சிகளும் வேலியை தீ வைத்துக் கொளுத்தும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com