இது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்

இது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்
இது குறிஞ்சி விழா ஆண்டு - களைகட்டுகிறது கொண்டாட்டம்

12 வருடங்களுக்கு ஒருமுறை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கும் நிகழ்வை முன்னிட்டு, 2018 ஆம் ஆண்டை, குறிஞ்சி விழா ஆண்டாக இரண்டு மாதங்கள் கொண்டாட மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள், பலநூறு ஏக்கர் கணக்கில் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்கியுள்ளது. இதனை முன்னிட்டு  இந்த ஆண்டை குறிஞ்சி விழா ஆண்டாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார். 

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குறிஞ்சி பூத்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர், பின்னர் தன்னார்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாலோசனைக்கு பின்னர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், 2018 ஆம் ஆண்டில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்து குலுங்கியுள்ள பகுதிகளை சிறப்பாக புகைப்படம் எடுத்து, அதனை இரண்டு மாதங்கள், புகைப்பட கண்காட்சியாக பிரையண்ட் பூங்காவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளி மாணவ மாணவிகளை குறிஞ்சி பூத்துள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்று, அந்த பூவின் மகத்துவத்தை எடுத்துரைக்க திட்டமிட்டிருப்பதாகவும், கூறினார்.

மேலும் குறிஞ்சி சுற்றுலாவை இரண்டு மாதங்கள் ஏற்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை, கொடைக்கானல் நோக்கி ஈர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். இந்த திட்டங்கள் கொடைக்கானல் வாழ் மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com