'1 மணி 40 நிமிடங்களில்...' - வருகிறது சென்னை - மைசூர் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!

'1 மணி 40 நிமிடங்களில்...' - வருகிறது சென்னை - மைசூர் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
'1 மணி 40 நிமிடங்களில்...' - வருகிறது சென்னை - மைசூர் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!

சென்னை - மைசூர் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. 

மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகம்; கூரான தோட்டாவை போன்ற முகப்பு... - இதுதான் ஜப்பான் நாட்டில் ஷின்கன்சென் என்ற பெயரில் வலம் வரும் அதிவேக புல்லட் ரயில்.

இந்தியாவில் 'ட்ரெயின் 18' என அழைக்கப்படும் 'வந்தே பாரத்' ரயிலின் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர் மட்டுமே. ஜப்பான் நாட்டின் இந்த அதிவேக தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் ஒன்று சென்னை - பெங்களூரு - மைசூர் அதிவேக வழித்தடம்.

இந்த புல்லட் ரயில் மூலம் 435 கிலோமீட்டர் தூரம் கொண்ட சென்னை - மைசூர் இடையேயான பயணத்தை வெறும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் புல்லட் ரயில் சேவை மூலம் கடக்கலாம். சென்னையில் இருந்து மைசூர் வரை செல்ல பேருந்தில் சராசரியாக 12 மணி நேரமும், ரயிலில் சராசரியாக 10 மணி நேரமும், விமானத்தில் சென்றால் சராசரியாக 1 மணி நேரம் 30 நிமிடமும் ஆகின்றன.

இந்த புல்லட் ரயில் மூலம் விமானத்திற்கு இணையான நேரத்தில் மைசூரை சென்றடைய முடியும். தேசிய நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து தேசிய அதிவேக ரயில் நிறுவனம் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

மத்திய அரசை பொறுத்தவரை, மும்பை - அகமதாபாத், டெல்லி - வாரணாசி ஆகிய அதிவேக வழிதடங்களை அமைப்பதில் மும்முரம் காட்டிவரும் நிலையில், சென்னை - பெங்களூரு - மைசூர் ஆகியவற்றை இணைக்கும் அதிவேக வழித்தடமும் வருங்காலத்தில் முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com