\
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்று

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்று

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்று
Published on: 

10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

எளிதில் கிழியாத, நீரில் சேதமடையாத வகையில் செயற்கை இழையால் மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com