இன்றைய முக்கியச் செய்திகள் சில.. 

இன்றைய முக்கியச் செய்திகள் சில.. 

இன்றைய முக்கியச் செய்திகள் சில.. 
Published on

இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் நிலவரம், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே நாடாளுமன்ற விதிகளுக்குட்பட்டு குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்னைகள் குறித்து அரசு விவாதிக்கத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்ச மொத்தம் 69 லட்சத்து 24ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இளையராஜா, ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கமலின் திரை வாழ்வு குறித்த வரலாற்று சிறப்புக்குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அயோத்தி வழக்கு‌ தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. விரைவில் இந்த மனுத் தக்கால் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தேர்தல் சம்பந்தமான முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அவரது ரசிகர்கள் பங்கேற்றனர். அந்தக் கூடத்திற்குப் பின் பேசிய ரஜினியின் நண்பரும் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான குமரவேல், மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியிலேயே ரஜினி போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com