‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... பால் மூலம் கிடைக்கும் கொழுப்பு மிகவும் முக்கியமானது' -

“பால் மூலம் கிடைக்கும் கொழுப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் முக்கியமானது” - மருத்துவர்கள்
பால் மூலம் கிடைக்கும் கொழுப்புகள்
பால் மூலம் கிடைக்கும் கொழுப்புகள்முகநூல்

மிகச்சிறந்த சத்துணவான பாலில் கொழுப்பு, புரதம், கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் டி என்று பல சத்துகள் உள்ளன. தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஸ்கிம்டு பால் (கொழுப்பு நீக்கியது) என்று பலவித பால் வகைகளும் உள்ளன.

பல வகைகள், பல சத்துகள் இருந்தபோதிலும்கூட, பாலில் உள்ள கொழுப்புகள் பற்றிய விவாதம் சமீபகாலமாக அதிகம் எழுந்துள்ளது. ஆகவே பாலிலுள்ள சத்துகள் பற்றி மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை இங்கே காணலாம்.

பாலில் உள்ள கொழுப்புகளின் முக்கியத்துவம்:

மருத்துவர் பூங்குழலி:

“குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 13 கிராம் கொழுப்பும் பெரியவர்களுக்கு 25 முதல் 30 கிராம் கொழுப்பும் தேவைப்படுகிறது. பால் மூலம் கிடைக்கும் கொழுப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது”

ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி கூறும் தகவல்கள்:

3 வகையான கொழுப்புகள்:

“அன்றாடம் 2000 கலோரி டயட் ஃபாலோ செய்தால் அதில் 44 - 78 கிராம் மட்டுமே கொழுப்பின் அளவு என்பது இருக்க வேண்டும். கொழுப்புகளை பொருத்தவரை 3 வகையான கொழுப்புகள் இருக்கிறது. அவை, நிறைவுற்ற - நிறைவுறா - ட்ரான்ஸ் கொழுப்புகள். இவை ஒவ்வொன்றும் எவ்வளவு எடுக்கவேண்டும், எதிலெல்லாம் இவை இருக்குமென்றும் சொல்கிறேன்.

ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி
ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினிPT Desk

நிறைவுற்ற கொழுப்பு:

நிறைவுற்ற கொழுப்பு - ஆண்கள் 30 கி., பெண்கள் 20 கி எடுத்துக் கொள்வது அவசியம். வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், பாமாயில் ஆகியவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் கிடைக்கிறது.

நல்ல கொழுப்பு (அ) நிறைவுறா கொழுப்பு:

அன்றாட உணவில் 20 - 30% கொழுப்பு, நிறைவுறா கொழுப்பாக இருக்கவேண்டும். இதில் இரண்டு வகை உண்டு. அவை மோனோ, பாலி.

மோனோ நிறைவுறா கொழுப்பு - 33-44 கி. - ஒருநாளில் தேவைப்படும்.

பாலி நிறைவுறா கொழுப்பு 11-22 கி ஒருநாளில் தேவைப்படும்.

மோனோ வகையான நிறைவுறா கொழுப்புகள் நட்ஸ், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எள் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களிலும்,

பாலி வகையான நிறைவுறா கொழுப்புகள் வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், சூரை மீன், சால்மன் மீன் ஆகியவற்றிலும் கிடைக்கிறது.

பால் மூலம் கிடைக்கும் கொழுப்புகள்
உணவில் உப்பு அதிகமாக சேர்த்தால் ஆபத்தா?

கெட்ட கொழுப்பு / ட்ரான்ஸ் ஃபேட்:

இவ்வகையான கொழுப்புகள் 5 கி. க்கு குறைவாகதான் ஒருநாளில் நாம் எடுக்க வேண்டும். இவற்றை முற்றிலும் தவிர்ப்பது என்பது நல்லது.

கேக், பிஸ்கட், வறுத்த உணவுகள், பர்கர் ஆகியவற்றில் இவ்வகையான கொழுப்புகள் கிடைக்கிறது.

பாலை பொறுத்தவரை, அதில் 65% நிறைவுற்ற கொழுப்பு; 30% மோனோ நிறைவுறா கொழுப்பு; 5% பாலி நிறைவுறா கொழுப்பு இருக்கிறது. இது தோராயமாண கணக்குதான். அளவு, வகைகளைபொறுத்து இவை மாறுபடலாம். இதில் ட்ரான்ஸ் ஃபேட் இல்லையென்பதால், அச்சம் தேவையில்லை. அதேநேரம், சர்க்கரை சேர்த்து அதிக பால் குடிக்கும்போது, அது ஆபத்தாகலாம்”

பால் மூலம் கிடைக்கும் கொழுப்புகள்
உச்சி முதல் பாதம்வரை.. ஒரு கப் பால் மூலம் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா! #12BenefitsOfMilk #WorldMilkDay

குறிப்பு - ‘பெண்கள் பால் அருந்த கூடாது, அப்படி குடித்தால் உடல் எடை கூடும், மாரடைப்பு வரும்’ என்னென்றால் கட்டுகதைகள் ஏராளம். எந்த உணவாக இருந்தால் அதனை சரியான அளவில் எடுத்து கொள்து மிகவும் அவசியம் ‘அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com