தமிழ்நாடு
நியாயவிலைக் கடைகளில் புகார் பதிவேடு முறையை உடனடியாக அமல்படுத்துக: அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் புகார் பதிவேடு முறையை உடனடியாக அமல்படுத்துக: அரசு உத்தரவு
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் இருப்பதால், எழுத்து மூலம் தெரிவிக்க வழிவகை செய்ய வேண்டும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இணையவழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையோடு புகார் பதிவேட்டையும் பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.