\
இமானுவேல் சேகரனின் நினைவுதினம்: மதுரையில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

இமானுவேல் சேகரனின் நினைவுதினம்: மதுரையில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

இமானுவேல் சேகரனின் நினைவுதினம்: மதுரையில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு
Published on: 

இமானுவேல் சேகரனின் 64ஆவது நினைவு தினத்தன்று மதுரை மாவட்டத்தில் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும் என ஆட்சியர் அனிஷ்சேகர் அறிக்கை வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com