இம்மானுவேல் சேகரன் நினைவுநாள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

இம்மானுவேல் சேகரன் நினைவுநாள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

இம்மானுவேல் சேகரன் நினைவுநாள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on

ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை அனுசரிக்கபடுவதால் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் நாளை இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் கலவரம், வன்முறைகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து நாளை பாதுகாப்பு பணியில் 4 டிஐஜிக்கள், 17 எஸ்பி-க்கள் உள்பட 2,500 காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com