ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்முகநூல்
தமிழ்நாடு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அதிரடி அறிவிப்பு!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகப்பட்டினத்திலிருந்து 330 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தூரத்திலும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது நாகப்பட்டினத்திலிருந்து 330 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தூரத்திலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, நாளை காலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.