தமிழக மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்

தமிழக மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்
தமிழக மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்

தமிழகத்தில் அடுத்த சில நாள்களில் மழை எப்படி இருக்கும் என்ற நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில் கூறப்பட்டிருப்பவை:

“தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

2-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

3-ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

4-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

டிஜிபி அலுவலகம் (சென்னை) 24, ஆவடி (திருவள்ளூர்) 23, எம்ஆர்சி நகர் (சென்னை) 21, சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 20,

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செம்பரபாக்கம் (திருவள்ளூர்), தண்டையார்பேட்டை (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை) தலா 19, அயனாவரம் (சென்னை), ஒய்எம்சிஏ நந்தனம் தலா 18, பெரம்பூர் (சென்னை) 15, சோழிங்கநல்லூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 12, சீர்காழி (மயிலாடுதுறை), திரூர் கேவிகே (திருவள்ளூர்) 11 , கொள்ளிடம் (மயிலாடுதுறை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 10, செ மீ மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com